TamilsGuide

சுசீலாவுக்கு நெருக்கமான ஒரு தோழி இருக்கிறார் என்றால் அது பின்னணி பாடகி ஜமுனா ராணி  அவர்கள் தான்.

"மாமா மாமா மாமா", "காளை வயசு கட்டான சைசு", "பாட்டொன்று கேட்டேன்", "காவிரி தாயே காவிரி தாயே", "செந்தமிழ் தேன் மொழியாள்", "தாரா தாரா வந்தாரா:, "பக்கத்திலே கன்னி பொண்ணிருக்கு", "யாரடி நீ மோகினி", "குங்கும பூவே கொஞ்சு புறாவே", "நெஞ்சில் குடியிருக்கும்", "ஆதி மனிதன் காதலுக்கு பின்". "சித்திரத்தில் பெண் எழுதி", "காமுகர் நெஞ்சில் நீதியில்லை" என பல ஹிட்ஸ் நினைவில் வந்து போகிறதா? ஜமுனாராணி வயதில் பி.சுசீலாவை விட சிறியவர் என்றாலும் பி.சுசீலா திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்னாலேயே திரை உலகில் அறிமுகமானவர்.

ஐம்பதுகளில் நிறைய இசை அமைப்பாளர்கள் திரை உலகை ஆக்கிரமித்து இருந்தார்கள். அதைப்போல் நிறைய பாடகிகளும் இருந்தார்கள். எல்லோருக்கும் ஒரு தனித்துவம் இருந்ததால் வாய்ப்புகளும் நிறைய இருந்தது. அந்த கால கட்டத்தில் ஜமுனாராணி நிறைய ஹிட்ஸ் கொடுத்தார்.

ஜமுனாராணி பி.சுசீலாவுக்கு நெருக்கமானவர் என்பதால் அடிக்கடி பி.சுசீலாவை சந்திப்பதுண்டு. அவர் பி.சுசீலா டிரஸ்டில் ஒரு டிரஸ்டீ எனபது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்ப்பில்லை. பி.சுசீலாவுடன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சியும் நடத்தி இருக்கிறார்.

இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

பி.சுசீலாவும் ஜமுனா ராணியும் இணைந்து பாடிய பாடல்கள் என்றால் முதன் முதலில் நினைவுக்கு வருவது "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்" பாடல் தான். அவ்வளவு பாப்புலர் அந்த பாடல் என்றால் மிகை இல்லை. 

Prashantha Kumar
 

Leave a comment

Comment