TamilsGuide

கொழும்பின் புறநகர் பகுதியில் சுற்றிவளைப்பு - 34 பெண்கள் உட்பட 43 பேர் கைது 

கொழும்பின் புறநகர் பகுதியான தலவத்துகொட பகுதியில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட நிலையங்கள் மீது பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் செயற்பட்டு வந்த 9 தகாத செயற்பாட்டு விடுதிகள் நேற்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

வாலான மத்திய ஊழல் ஒழிப்பு படையினரால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்கள் உட்பட 43 பேர் கைது

இதன்போது 34 பெண்கள் உட்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Leave a comment

Comment