TamilsGuide

மலையக மக்களின் கிராம அபிவிருத்திக்காக நடைபெற்ற சிறப்பு இராப்போசன சந்திப்பு வெற்றிகரமாக நிறைவு!

நேற்று மாலை ஸ்கார்பரோவில் உள்ள The Estate Banquet & Event Centre இல் நடைபெற்ற, நுவரெலியா மாவட்டத்தின் புளியாவத்தை கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கிலான சிறப்பு இராப்போசன சந்திப்பு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மனோ கணேசன் அவர்கள் கலந்து கொண்டு மலையக மக்களின் தற்போதைய நிலை, எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கிய சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற உறுதியுடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது.

🙏 இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி.

"மலையகத்தின் முன்னேற்றத்திற்கு நாம் கைகோர்ப்போம்!"
 

Leave a comment

Comment