• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு

இலங்கை

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.

இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித என்பு கூடுகள் மீட்கப்பட்டமையே, இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட புதைகுழியாக காணப்பட்டது.

இந்நிலையில் செம்மணியில் நேற்;றையதினத்துடன் 380 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன..

அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் 362 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து தொடர்ச்சியாக என்புகூடுகள் மீட்கப்படுகின்றனவே தவிர, அவை யாருடையவை என்பதை அடையாளம் காணும் பணிகள், ஒருவருடங்கள் கடந்தும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a Reply