• Welcome to TamilsGuide
செய்திகள் 1

8 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. 

சினிமா

தமிழ் சினிமாவில் 46 ஆண்டுகளை கடந்து மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் நடிகர் அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பிளாஸ்ட்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதுவும் அர்ஜுனுக்கு இணையான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தனர்.

நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்து பிளாஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிவருகிறது. இந்த நிலையில், 8 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 8 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 41 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Leave a Reply