• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடிகளா? வசூலை வாரிக்குவிக்கும் கருப்பு

சினிமா

ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் கருப்பு. இந்தப் படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜன் சுப்பிரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ. 207 கோடி வசூலைத் தாண்டியதாக படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது. சமீபத்தில் கருப்பு திரைப்படம் வசூலில் ரூ. 300 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆஃபீசில் மட்டும் ரூ. 175 கோடிகளை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இது குறித்து படக்குழு சார்பில் சிறப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் நான்காவது வாரத்தை நெருங்கும் கருப்பு திரைப்படம் வசூலில் மேலும் பல கோடிகளை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply