• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சரோஜா தேவிக்கு பதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா!!

சினிமா

உங்க பொண்ணுக்கு என் படத்தில் வாய்ப்பு இல்ல, சரோஜா தேவிக்கு பதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா!!

க்ளாசிக் தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த எம்.ஜி.ஆர் சரோஜா தேவி ஜோடி பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த நிலையில், தயாரிப்பாளருக்கு சரோஜா தேவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவருக்கு போட்டியாக ஜெயலலிதாவை கொண்டுவந்துள்ளார். அதற்கு கண்ணதாசனும் தனது பாடல்கள் மூலம் உதவியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து சினிமா விமர்சகர் துரை சரவணன் தனது யூ*டியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகியாக இருந்தவர் சரோஜாதேவி. எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ஜோடி புகழ்பெற காரணமாக இருந்தவர் தயாரிப்பாளர் சின்னப்பா தேவர். சரோஜாதேவி பெரிய வெளிச்சத்திற்கு வந்தப் பிறகு, அவரின் தாயார் ருத்ரம்மா தயாரிப்பாளர்களிடம் கறாராக நடந்துக் கொண்டதால், இது திரைத்துறையில் புகைச்சலாக இருந்து வந்தது.

அந்த சமயத்தில், சின்னப்பா தேவர் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தில் அவருக்கு நடிக்க சரோஜாதேவி கால்ஷீட் கேட்டு சென்ற சின்னப்ப தேவர் எம்.ஜி.ஆர் வரும் நாட்களில் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், சரோஜா தேவியின் அம்மா ருத்ரம்மா தேதிகளை எங்களிடம் கேட்டு முடிவுச் செய்ய வேண்டும் என கறாராக கூறியுள்ளார். 4 மொழிகளில் சரோஜாதேவி நடித்து வருகிறார். சிவாஜி கால்ஷீட் கேட்டே கொடுக்க முடிவில்லை. 

மேலும், கலர் படம் எடுக்கும் பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் சரோஜாதேவியின் கால்ஷீட்க்கு கேட்கிறார்கள் எங்களால் கொடுக்க முடியவில்லை. நீங்க ப்ளாக் அண்ட் ஒயிட் படம் தானே எடுக்குறீங்க என்பது போல் ருத்ரம்மா சொல்ல, இதைகேட்டு கோபமடைந்த சின்னப்பா தேவர் என் படத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். இனிமேல் என்னுடைய எந்தப் படத்திலும் உங்க பொண்ணு நடிக்காது என்று கோபமாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

அடுத்ததாக சின்னப்பா தேவர் நடிகை சாவித்திரியிடம் சென்று கால்ஷீட் கேட்டு வேட்டைக்காரன் படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகி இல்லை என்ற பேச்சு எழுந்தது. இதனை சரி செய்ய சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆரை சந்தித்து பேச, ஆயிரத்தில் ஒருவன் பட சூட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்கிறார். அந்தப் படத்தில் தான் ஜெயலலிதா முதன்முறையாக எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகிறார்.

அப்போது நாணமோ, நாணமோ பாடல் சூட்டிங் நடந்தது. அதில் ஜெயலலிதா நடிக்க சிரமப்பட்டது போல் தெரிந்து, இயக்குனர், சின்னப்பா தேவர் எல்லோரும் அவரை தேற்றி நடிக்க வைக்கிறார்கள். ஆனால் பின்னர் காட்சியை மீண்டும் போட்டு பார்த்தபோது தான் ஜெயலலிதா, கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு ஏற்ப சிறப்பாக நடித்தது தெரியவந்தது.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply