சிவராஜ் குமார் - அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படம் - புரோமோ வெளியீடு
சினிமா
கடந்த ஆண்டு சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி பெருவெற்றி பெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இதைத்தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வித் லவ் படத்தில் ஹீரோவாகவும் அவர் அறிமுகமானார். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் அபிஷன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் அபிஷன் நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் கெளதம் சிவராமன் இயக்க உள்ளார். இவர் டூரிஸ்ட் பேமிலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அபிஷனுக்கு அப்பாவாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. இதன் படப்பிடிப்பும் சென்னையில் துவங்கியுள்ளது.
இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை அபிஷன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.






















