• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கதைஷார்ட்ஸ் - மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதை தளம்

சினிமா

வேகமாக மாறிவரும் பொழுதுபோக்கு தேவைகளை கருத்தில் கொண்டு, கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) எனும் தமிழ் நாட்டின் முதல் - ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளத்தை கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.

'குட்டி சீரிஸ்' என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட சினிமா தரத்திலான தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான எபிசோடுகளை கொண்ட கதைகளை கதைஷாட்ஸ் அறிமுகப்படுத்துகிறது. தொடக்கத்தில் தமிழில் மட்டும் கவனம் செலுத்தவுள்ள கதை ஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை அந்த நிலத்தின் தன்மையுடன் உருவாகும் ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ டிராமாக்கள் வாயிலாக பொழுதுபோக்கு துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதே கதைஷார்ட்ஸின் நோக்கமாகும். முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை உருவாக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பேசிய கதைஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம். கதைஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார்.
 

Leave a Reply