TamilsGuide

எல்லை இல்லா வசூல் வேட்டையில் நடிகர் சூர்யாவின் கருப்பு படம்... 

நடிகர் சூர்யா, கடந்த சில வருடங்களாக படங்கள் நடித்தாலும் பெரிய அளவில் ஒரு ஹிட் படம் அவருக்கு அமையவில்லை.

இடையில் பல படங்கள் அவருக்கு சோதனை கொடுத்தாலும் அதைக்கண்டு துவண்டு போகாமல் வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தார். அப்படி இந்த கதை கண்டிப்பாக மக்களிடம் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கையில் சூர்யா கமிட்டாகி நடித்து வெளியான படம் தான் கருப்பு. 

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க இப்படம் பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த மே 15ம் தேதி வெளியானது.

படம் வெளியான முதல் நாளே அதிரடி மாஸ் வரவேற்பு பெற்றது. படம் ரிலீஸ் ஆன சில தினங்களில் படத்தை வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி கூறி சூர்யாவும் சந்தோஷமாக ஒரு வீடியோ வெளியிட்டார்.

நடிகை ஜோதிகாவும், சூர்யாவின் கருப்பு படம் செம வெற்றி, எங்கள் வீடே செம கொண்டாட்டத்தில் உள்ளது என்று கூறியிருந்தார். படமும் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தற்போது வரை இப்படம் உலகம் முழுவதும் ரூ. 295 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.
 

Leave a comment

Comment