TamilsGuide

உக்ரைன் போர்க்களத்தில் இராணுவ ரோபோக்கள்

உக்ரைன், தற்போதுஇராணுவ ரோபோக்களை போர்க்களத்தில் பயன்படுத்தி வருவதாக சர்வதீச ஊடகங்க்கள் தெரிவிக்கின்றன.

ஆளில்லா வான்வழி ட்ரோன்கள், தரைவழி ரோபோக்கள் மற்றும் தானியங்கி டாங்கிகள் மூலம் உக்ரைன் இராணுவம் ரஷ்யப் படைகளுக்குப் பலத்த முறியடிப்புப் பதிலடிகளை வழங்கிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கணக்கீட்டின்படி, இதுவரை நடத்தப்பட்ட 164 தாக்குதல்களை மனிதர்களைக் கொண்டு நடத்தியிருந்தால், அதற்கு சுமார் 2,300 படைவீரர்கள் தேவைப்பட்டிருப்பார்கள்.

அத்தகைய நேரடித் தாக்குதல்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட உக்ரைனிய வீரர்கள் உயிரிழக்கவோ அல்லது படுகாயமடையவோ வாய்ப்பிருந்திருக்கும்.

ஆனால், இந்த நான்கு சக்கர வெடிகுண்டு ரோபோக்களின் பயன்பாட்டினால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைனிய வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என உக்ரைன் துணைப் படைப்பிரிவுத் தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment