TamilsGuide

1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும் தாய்லாந்து நாட்டு மீட்புக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

தங்கம் தேடுவதற்காக 7 கிராம மக்கள் அடங்கிய குழுவினர் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இந்தக் குகைக்குள் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவர்கள் குகைக்குள் இருந்த வேளையில் பெய்த கனமழை மற்றும் குகையின் உட்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக குகையின் நுழைவாயில் முற்றிலும் மூடப்பட்டுள்ளது.

இதனால் அவர்களால் மீண்டும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கியுள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில், அவர்களில் ஒருவர் மாத்திரம் எப்படியோ தப்பித்து வெளியே வந்து, குகைக்குள் சிக்கியுள்ள மற்ற நபர்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.  
 

Leave a comment

Comment