• Welcome to TamilsGuide
செய்திகள் 1

34 கோடி ரூபாய் இழப்பீடு - மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்ட இந்தியர்

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் ஒருவரை கேரள மக்கள் எல்லோரும் சேர்ந்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அப்துல் ரஹீம் என்பவர் கடந்த 2026ம் வருடம் அவர் சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றிருக்கிறார்.

ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனை கவனித்துக் கொள்ளும் வேலை அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர் பணியில் இருந்த போது அந்த சிறுவன் உயிரிழந்ததால் பலி அப்துல் ரஹீம் மீது விழுந்தது.

இதனால், அவருக்கு சவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.. தான் இந்த தவறும் செய்யவில்லை என அப்துல் ரஹீம் கூறியதால் சிறுவனின் குடும்பத்தினர் தங்களுக்கு இந்திய ரூபாயில்  34 கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தால் அவரை மன்னிப்பதாக கூறினார்கள்.

இதையடுத்து கேரள தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பொதுமக்கள் என பலரிடமும் சமூக வலைதளம் மூலம் 34 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அதன்பின், அந்த பணம் மகனை இழந்த குடும்பத்தினருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டது.

இதையடுத்து அப்துலை மன்னிப்பதாக அவர்கள் அறிவித்தனர். இதையடுத்து அப்துலுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20 வருடங்களாக சிறையில் இருந்த அப்துல் ரஹீம் விடுதலை செய்யப்பட்டார். 
 

Leave a Reply