• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவர்ச்சியில் கலக்கிய மிருணாள் தாக்கூர்-பூஜா ஹெக்டே

சினிமா

டேவிட் தவான் இயக்கத்தில் வருன் தவான் நடிப்பில் உருவான படம் ‘ஹைஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’. படத்தின் கதாநாயகிகளாக மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற ஜூன் 5-ந்தேதி படம் திரைக்கு வருவதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது. உறவுகள் கர்ப்பம் தொடர்பான திருப்பங்களுடன் ஒரு நகைச்சுவை கதையாக இந்த படம் உருவாகிறது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மிருணாள் தாக்கூரும், பூஜா ஹெக்டேவும் கவர்ச்சி தோற்றத்தில் வந்து பார்வையாளர்களை மிரள வைத்தனர். இருவரது தோற்றங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

படத்தின் இயக்குனரான டேவிட் தவான் 6 வருட இடைவெளிக்கு பிறகு 74 வயதில் மீண்டும் இந்த படத்தின் மூலம் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.

Leave a Reply