• Welcome to TamilsGuide
செய்திகள் 1

18 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வரும் இந்தியரை நாட்டை விட்டு வெளியேற சொன்ன ஜப்பான் 

ஜப்பானின் டோக்கியோ நகரில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மணிஷ் குமார் கடந்த 18 ஆண்டுகளாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனது வணிக மேலாளர் விசா காலாவதியானதை தொடர்ந்து, அதை புதுப்பிக்கும்படி விண்ணப்பத்துள்ளார்.

ஆனால் ஜப்பானின் கடுமையான குடிவரவு விதிகளின் கீழ், மணிஷ் குமாரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அவர்,

“இத்தனை ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வரும் எனது குடும்பத்தினர் எதிர்காலத்தை குறித்து அஞ்சுகின்றனர்.

என் பிள்ளைகள் ஜப்பானில் பிறந்து வளர்ந்தவர்கள், அவர்களுக்கு ஜப்பானிய மொழி மட்டுமே தெரியும். ஆனால் எங்களை இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல சொல்கிறார்கள். நான் என்ன செய்வது?” என்று கண்ணீர் மல்க கூறினார்.
 

Leave a Reply