• Welcome to TamilsGuide
செய்திகள் 1

9,500 மைல்கள் தூரம் பயணித்து போர் நடத்த முடியாது - தாய்வானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

சீனாவுக்கான தனது அதிகாரப்பூர்வப் பயணத்தை நிறைவு செய்து திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தாய்வான் விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.

அதில், தாய்வான் நாடு அதிகாரப்பூர்வமாக சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவதற்கு எதிராக அவர் எச்சரித்துள்ளார்.

யாராவது சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவதையோ, அதற்காக நாம் 9,500 மைல்கள் தூரம் பயணித்து ஒரு போரில் ஈடுபடுவதையோ நான் விரும்பவில்லை எனவும், நான் அதற்குத் தயாராக இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் இருதரப்பும் அமைதி காக்க வேண்டும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a Reply