TamilsGuide

கருப்பு திரைப்படத்தை பாராட்டி தள்ளிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கருப்பு. பல முறை இந்தப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தத் திரைப்படம் நேற்று (மே 15) உலகமெங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கருப்பு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்தவர்களும் கருப்பு திரைப்படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கருப்பு திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். படம் குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "கருப்பு திரைப்படத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்ந்தேன். சூர்யா சார், எனக்கு மிகவும் பிடித்த திரிஷா, சாய் அபயங்கர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் இந்த கோடைக்காலத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை வழங்கியிருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆர்.ஜே. பாலாஜி நீங்கள் இவ்வாறு கொண்டாடுவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரபு எஸ்.ஆர். வாழ்த்துகள்!," என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment