ஜனநாயகன் படத்தின் ஓ.டி.டி. உரிமைக்கு மீண்டும் போட்டாபோட்டி
சினிமா
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைக்காத நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் படத்தின் ஓ.டி.டி. உரிமையும் கைவிடப்பட்டது. முழு படமும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதற்கிடையில் விஜய் தேர்தல் களத்தில் குதித்து முதலமைச்சரும் ஆகிவிட்டார். இதையொட்டி, 'ஜனநாயகன்' படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில்கூட படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா, 'ஜனநாயகன்' படம் விரைவில் திரைக்கு வரும் என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் ஜனநாயகன் படத்தின் ஓ.டி.டி. உரிமைக்கு போட்டாபோட்டி நடக்கிறதாம். பல்வேறு முன்னணி நிறுவனங்கள் 'ஜனநாயகன்' படத்தின் ஓ.டி.டி. உரிமையை வாங்க கடும் போட்டியிட்டு வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது துவண்டு போயிருந்த படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
மேலும் படத்தில் விஜய்யின் பெயருக்கு முன்பாக 'முதலமைச்சர்' என்பதை இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறதாம்.






















