• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாளை வெளியாகிறது நூறு சாமி படத்தின் ரீங்காரா பாடல்

சினிமா

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன், லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஸ்வாசிகா, லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. தொடர்ந்து இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் ‘நூறு சாமி’ படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு, ‘ரீங்காரா’ பாடல் நாளை வெளியாகும் என தெரிவித்துள்ளது. 

Leave a Reply