• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அம்பாறையிலும் ஆரம்பம்

இலங்கை

தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று (12) அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது.

அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.

அங்கு கஞ்சி காய்ச்சி முன்னால் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழிபட்டு பின்னர் மக்களுக்கு மே 18 என எழுதப்பட்ட சிரட்டையில் வழங்கப்பட்டது.

இதில் பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply