• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேறு வழியில் வெற்றி பெறுவோம் - உறுதியாய் நிற்கும் ட்ரம்ப்

ஈரான் உடனான மோதல் போக்கில், அமெரிக்கா அமைதி வழியாகவோ அல்லது வேறு வழிகளிலோ நிச்சயம் வெற்றி பெறும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள ட்ரம்ப், அங்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார்.

இதற்கிடையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஈரான் விவகாரத்தில் சீன ஜனாதிபதியின் உதவி தேவைப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப் "இல்லை, ஈரான் விவகாரத்தில் எங்களுக்கு யாருடைய உதவியும் தேவைப்படும் என்று நான் நினைக்கவில்லை.

ஏதோ ஒரு வழியில் நாங்கள் இதில் வெற்றி பெறுவோம். அமைதி வழியாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு முறையிலோ அந்த வெற்றி அமையும்" என்றார்.

தொடர்ந்து ஈரானின் இராணுவ பலம் குறித்து பேசிய அவர், "அவர்களின் கடற்படை, வான்படை மற்றும் போர் இயந்திரத்தின் ஒவ்வொரு அங்கமும் தற்போது செயலிழந்துவிட்டன" என்றும் குறிப்பிட்டார்.
 

Leave a Reply