TamilsGuide

கனடாவுக்கான அமெரிக்க தூதரின் திடீர் முடிவு - பின்னணி

கனடாவுக்கான அமெரிக்க தூதர், தலைநகரில் கூட்டம் ஒன்றில் பங்கேற்கவிருந்த நிலையில், அந்தக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனடாவுக்கான அமெரிக்க தூதரான பீற் (Pete Hoekstra), கனடா தலைநகர் Ottawaவில் கூட்டம் ஒன்றில் பங்கேற்க இருந்தார். 

ஆனால், கூட்டம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு திடீரென அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

வெள்ளை மாளிகை அலுவலர்களுடன் முக்கிய சந்திப்பு இருப்பதால், அவர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment