TamilsGuide

ஆளுநருடன் விஜய் சந்திப்பில் உடன் இருந்த ஜனநாயகன் தயாரிப்பாளர் ... 

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது.

ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது.

இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 இடங்கள் வென்ற காங்கிரஸ் நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் இன்று ஆதரவு தெரிவித்தன.

ஆதரவு கடிதங்களுடன், விஜய் இன்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது. நேரு ஸ்டேடியம் தயாராகி வருகிறது.

இதற்கிடையே ஆளுநரை விஜய் சந்தித்தபோது அவருடன் கேவிஎன் தயாரிப்பு நிறுவன தலைவர் வேங்கட நாராயணா உடன் இருந்தார்.

கேவிஎன் தயாரிப்பில் விஜய்யின் ஜனநாயன் ரிலீஸ் ஆகாமல் சென்சார் வாரியத்தால் முடங்கியுள்ளது. இடையில் அந்த படம் எடிட்டர் ஒருவரால் இணையத்தில் கசிந்தது.

விரைவில் அந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாராயணா விஜய்யுடன் ஆளுநரை சந்திக்க சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர் தவெக கட்சியில் உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆந்திர பிரதேச கிரானைட் தொழிலதிபர் விஷ்ணு ரெட்டியும் இதன்போது உடன் இருந்தது கவனம் பெற்றுள்ளது.


 

Leave a comment

Comment