TamilsGuide

35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது

வெளிநாட்டுப் பயணங்களுக்கான விசாக்களை வழங்கி தனிநபர்களிடமிருந்து 35.8 மில்லியன் ரூபா மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் ஒருவர் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, பாணந்துரவைச் சேர்ந்த 41 வயதான சந்தேக நபர் நேற்று (06) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் 21 பேரிடமிருந்து மொத்தம் ரூ. 35,800,557.86 வசூலித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment