TamilsGuide

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா

குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர நேற்றையதினம் (06) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை அவர் குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்துவிடம் கையளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மாநகர சபைக்குள் நிலவும் முறையற்ற நிர்வாகம், மோசடி, ஊழல் மற்றும் வீண் விரயங்களைக் குறைக்க முடியாமையினால் தாம் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்ததாக பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத வர்த்தக நடவடிக்கைகள், சட்டவிரோத கட்டுமானங்கள், முறையற்ற எரிபொருள் பயன்பாடு, முறையற்ற மேலதிக நேர கொடுப்பனவுகள், சேவைக்கு வருகை தந்துவிட்டு இடையில் வெளியேறுதல், நகரை சுத்தமாக பராமரிக்க முடியாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தான் பதவி விலகுவதாக பிரேமச்சந்திர தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குருநாகல் மாநகர சபையின் முதலாம் இலக்க கங்கோட தொகுதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று இவர் மாநகர சபைக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment