TamilsGuide

ரத்னகுமாரின் 29 டிரெய்லர் வெளியானது

மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் எழுதி, இயக்கியுள்ளப் புதிய படம் 29. இப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், ஷெனாஸ் பாத்திமா மற்றும் பிரேம் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மதேஷ் மணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் பேனர்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

இப்படத்தின் டீசர், பாடல்கள், புரோமோ வீடியோக்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. 
 

Leave a comment

Comment