TamilsGuide

சட்டென்று மாறுது வானிலை டிரெய்லர் வெளியீடு

பாபு விஜய் எழுத்து, இயக்கத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில் உருவாகி உள்ள காதல் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரைப்படம் ‘சட்டென்று மாறுது வானிலை’.

இப்படத்தில் யோகி பாபு, கருடா ராம் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

மே.15ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லரை இயக்குநர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment