• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன பதவியேற்பு

இலங்கை

ஜனாதிபதி மற்றும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோரின் அழைப்பிற்கு இணங்கவே, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதாக எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணித்தலைவர்களுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், நேற்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பொறுப்பை ஏற்கத் தீர்மானித்ததாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply