TamilsGuide

மாலைத்தீவு ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கை விஜயம்

மாலைத்தீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், 2026, மே 4 முதல் 5 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை  மேற்கொள்ளவுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதி முய்ஸு பதவியேற்ற பின்னர், அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 

இப்பயணத்தின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி திசாநாயக்கவுடன் அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் (MoUs) கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி முய்ஸுவுடன், அந்நாட்டின் முதல் பெண்மணி சஜிதா முகமது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட பல சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் மாலைத்தீவு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இவ்விஜயத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.
 

Leave a comment

Comment