TamilsGuide

தின­மும் காலை 4 மணிக்­கெல்­லாம் கண் விழித்து விடு­வேன்..

தின­மும் காலை 4 மணிக்­கெல்­லாம் கண் விழித்து விடு­வேன். அதன்­பி­றகு பூசை செய்து நடைப்­பயிற்சி, உடற்­ப­யிற்சி மேற்­கொண்டு சில சுலோ­கங்­களை எழுதி முடிப்­ப­தற்­குள் 10 மணி ஆகி­வி­டும். அதன்­பி­ற­கு­தான் பசி­யா­று­வேன். வீட்டு வேலைக்கு ஆட்­கள் இருந்­தா­லும் நானே­தான் சமைத்­துச் சாப்­பி­டு­வேன்,” 

திரை­யு­ல­கில் தீவி­ர­மா­கப் பணி­யாற்­றி­ய­போ­தும் அதி­காலை 3 மணிக்­கெல்­லாம் சென்னை கடற்­கரை­யில் நடைப்­ப­யிற்சி , அங்­கேயே உடற்­ப­யிற்சி, யோகா செய்­து­விட்­டு­தான் வீடு திரும்­பு­வேன்

வய­தா­கி­விட்­டா­லும் நான் உணவுக் ­கட்­டுப்­பா­டு­கள் எதை­யும் பின்­பற்­று­வ­தில்லை. சிறு­வ­யது முதல் இப்­ப­டிப்­பட்ட ஒரு வாழ்க்கை முறை­யைக் கடைப்­பி­டித்­த­து­தான் தம்மை இப்­போ­தும் சுறு­சு­றுப்­பாக இயங்க வைக்கிறது.

நான் கடை­சி­யாக நடித்த படம் ‘காதல் சடு­குடு’. விக்­ரம் நடித்த இப்­ப­டம் சுமார் 17 ஆண்­டு­க­ளுக்கு முன் வெளியீடு கண்­டது. அத்­தோடு நிறை­வ­டைந்த 50 ஆண்­டு­கால சினிமா வாழ்வு போது­மென்று ஒதுங்கி சென்னையில் வாழ்ந்து வரு­கி­றேன்

தனது சம­கால நடி­கை­க­ளான சரோ­ஜா­தேவி, லதா, ஷீலா உள்­ளிட்­டோ­ரு­டன் இன்­ற­ள­வும் தொடர்­பில் உள்ளனர்.

சரோ­ஜா­தேவி சென்னை வந்­தால் என் வீட்­டுக்கு வரு­வா­ர்.இரு­வ­ரும் மணிக்­க­ணக்­கில் பேசு­வோம்

நடிகை விஜயகுமாரி 🥀

Leave a comment

Comment