அமெரிக்கா பறிமுதல் செய்த ஈரான் கப்பலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - சீனா
ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே "அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பல் சீனாவிலிருந்து ஈரானுக்குச் சென்று கொண்டிருந்தது. ஏவுகணைகளுக்கான ரசாயன பொருட்கள் ஏற்றுமதியுடன் தொடர்புடையது. நிறுத்துமாறு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான உத்தரவுகளை அது ஏற்க மறுத்தது. ஈரானின் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்க சீனா உதவுகிறது என்பதற்கு இது மற்றொரு நினைவூட்டல். இது புறக்கணிக்க முடியாத ஒரு யதார்த்தம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பதில் அளிக்கையில் "எனக்குத் தெரிந்தவரை, இது ஒரு வெளிநாட்டு கொடி கொண்ட சரக்குக் கப்பல். எந்தவொரு தீய நோக்கமுள்ள தொடர்பையும் மிகைப்படுத்தலையும் சீனா எதிர்க்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.























