• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் திலகத்தின் முக்கிய படங்கள் - பாகம் 1

சினிமா

1 பராசக்தி -
முதல் திரைப்படம் முதல் திரைபடத்திலே சிவாஜி கணேசன் தனது நடிப்பால் ரசிகா்கள் மனதில் இடம்பிடித்தாா், கருணாநிதி அவா்களின். கனல் பறக்கும் கதை வசனம் வி. கே. ராமசாமி, எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய், ஆகியோருடன் இணைந்து சிவாஜி நடித்த முதல் திரைப்படம்

2 மனோகரா
சிவாஜிகணேசன்காக 4வது முறையாக வசனகர்த்தாவாக கலைஞர் கருணாநிதி அவா்களின் 50 பக்கம் வசனத்தை சிவாஜிகணேசன் அவர்கள் தனது சிம்மகுரலாலும் அழகான நடிப்பாலும் தமிழ் ரசிகா்களை கவா்ந்தார் இதில் தமிழ் படம் கதாசிரியர் ஆன ஜாவர் சீதாராமன் அவர்கள் சிவாஜி உடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ஆகும்

3 அந்த நாள்
பாடல்கள் இல்லாத முதல் இந்திய திரைப்படம். 'எதிர்மறை கதாநாயகன் (Anti Hero) பாத்திரம்.

4 கூண்டுக்கிளி
எம்ஜிஆருடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம் இதில் காதல் தொல்வியடைந்து சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வில்லனாக மாறி நடித்தார் டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம்

5 தெனாலி ராமன்
என் டி ஆருடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம், இதில் வில்லியாக பானுமதி அருமையாக நடித்திருந்தாா் சிவாஜிக்கு ஜோடியாக ஜமுனா முதல் முதலாக இணைந்து நடித்திருந்தாா். சிவாஜி தனது நடிப்பு ஆசானாக ஏற்று கொண்ட சித்தூர் வி. நாகையா சிவாஜி உடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம்

6 அம்பிகாபதி
முதலில் எம். கே. தியாகராஜ பாகவதர் கம்பராக நடிக்க இருந்தது பின்பு சில காரணத்தால் எம். கே. ராதா அவர்கள் கம்பராக நடித்தார், அம்பிகாபதி வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் சிவாஜி கணேசன். அம்பிகாபதி அமராவதியின் காதல் காவியம்

7 உத்தம புத்திரன்
சிவாஜி கணேசன் நடித்த முதல் இரட்டை வேடம் திரைப்படம், இந்த படத்தில் சிவாஜி கணேசன் சண்டை காட்சியில் ஸ்டைலாகவும் அழகான வசனம் பேசி நடித்ததால் ரசிகர்கள் விரும்பி பாா்த்தனர்.

8 வீரபாண்டிய கட்டபொம்மன்
*கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது.
* சர்வதேச விருது பெற்ற முதல் இந்திய நடிகர்.
* வீீரபாண்டியகட்ட பொம்மனை நமது கண்முன் காட்டினார்.
* சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த முதல் கேவா கலா் திரைப்படம்

9 பாகப்பிரிவினை
கை விலங்காத பக்கவாதம் வந்ததை போல் அருமையாக நடித்தாா். இதில் சிவாஜி கணேசன் உடன் சரோஜாதேவி அவர்கள் முதல் முதலாக ஜோடியாக நடித்தார், சிவாஜி கணேசன் படத்தில் எம். ஆர். ராதா அவர்கள் நடித்த முதல் திரைப்படம்

10 படிக்காத மேதை
வங்காள படத்தின் தழுவல். அப்பாவியாகவும் வெகுளிதனமாகவும் நடித்தார், முதலில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக சரோஜாதேவி அவர்கள் நடிக்க இருந்தது, அவர் கவா்ச்சி நடிகை என்பதல் சௌகார் ஜானகி அவர்கள் முதல் முதலாக சிவாஜியுடன் இணைந்து நடித்தார்.

11 பாவ மன்னிப்பு
பஞ்சசீலம் நாடகத்தில் ஜே. பி. சந்திரபாபு அவர்கள் நடித்த நாடகத்தின் தழுவல். இதில் இஸ்லாமிய கதாபத்திரத்தில் சிவாஜி கணேசன் அருமையாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிவாஜி கணேசன் தேவிகா உடன் முதல் முதலாக ஜோடியாக இணைந்து நடித்தார்

12 பாசமலர்
தனது தாயார் பெயரில் ராஜாமணி பிக்சர்ஸ் என்ற கம்பெனி தயாரிப்பு. நல்ல அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுத்த நல்ல திரைப்படம்

13 பாலும் பழமும்
டாக்டா் ரவி ஆக சிவாஜி கணேசனும் நர்ஸ் ஆக சரோஜாதேவியும் அருமையாக நடித்திருந்தனர் இந்த படத்தில் டி.பி.காய்ச்சலை பற்றி சிறப்பாக கூறியிருந்தனர். அதே போல் சிவாஜிக்கு சரோஜாதேவி மனைவியாகவும் தங்கையாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார்.

14 படித்தால் மட்டும் போதுமா
நல்ல அண்ணன் தம்பி சென்டிமென்ட் கொண்ட திரைப்படம் மனப்பெண் மாறுவது கதைகளமாக கொண்டது இதில் சிவாஜிக்கு அண்ணன் கதாபத்திரத்தில் நடிக்க முதலில் ஜெமினி கணேசன் அவா்களை தேர்வு செய்தனர் ஜெமினி சிவாஜி எனக்கு தம்பி நான் அவருக்கு எதிரியாக நடிக்கமாட்டேன் என்று கூற பின்பு ஏ. பீம்சிங் அவர்கள் கே. பாலாஜி அவா்களை சிவாஜிக்கு அண்ணன் ஆக நடிக்க வைத்தார்.

15 ஆலயமணி
எஸ். எஸ். ஆர், சரோஜாதேவியின் முக்கோண காதல் இவா்கள் மீது சந்தேக புத்தியுடன் பாா்க்கும் சிவாஜி கணேசனின் அசத்தலான நடிப்பு. இந்த படத்தில் கை கால் உடைந்த நிலையில் சிவாஜி கணேசன் பாடும் (சட்டி சுட்டதடா) பாடல் இன்றும் ரசிகர்களை ரசிக்க செய்கின்றது. இந்த படத்தில் தான் சிவாஜி கணேசன் ஐ வைத்து கே. சங்கர் அவர்கள் இயக்கிய முதல் திரைப்படம்

16 கர்ணன்
பாரதத்தில் வரும் கர்ணனையே நமது கண் முன் காட்டி நடித்திருப்பாா் சிவாஜி கணேசன் அவர்கள்.சிவாஜியின் முதல் ஈஸ்ட்மென்ட் கலர் படம்.பெரும் பொருட்செலவு. நல்ல வெற்றி திரைப்படம்

17 புதிய பறவை
சூப்பர் ஹீட் திகில் சம்பவம் நிரைந்த திரைப்படம். இந்த படத்தில் சரோஜாதேவி அவர்கள் சிவாஜியயை கோபால் கோபால் என்று அழைப்பது. இன்றும் தமிழ் ரசிகர்கள் சரோஜாதேவி ஐ கொண்டாடுகின்றனர். தமிழில் முதல் சஸ்பன்ஸ் நிறைந்த திரைப்படம். சிவாஜி பிலிம்சின் முதல் தமிழ்த் திரைப்படம். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் இன்றளவும் ரசிகர்களால் ரசித்து கெட்க படுகின்றது. ஆங்கில படங்களுக்கு இணையாக காட்சிகள். லைட்டிங் கேமிரா கோணம் அதிகமான மியூசிக் எக்கியூப்மென்ட்ஸ் கொண்ட பாடல்கள் காஸ்ட்யூம்ஸ்கள் அப்பப்பா, இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

Kalimuthu Raj

Leave a Reply