அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் மீண்டும் இறங்கும் கமலா ஹாரிஸ்
சினிமா
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும், கடந்த 2024 அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளாருமான கமலா ஹாரிஸ், வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளாா்.
பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கமலா ஹாரிஸ், ‘மீண்டும் போட்டியிடுவது குறித்து நான் சிந்தித்து வருகிறேன்; அதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்க மக்களின் நலனைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் தலைவரைத் தோ்ந்தெடுப்பதே முக்கியம்.
அதன் அடிப்படையிலேயே எனது இறுதி முடிவு அமையும்’ என்றாா்.






















