ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...
சினிமா
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மின்னஞ்சலின் அடிப்படையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















