ஈரான் விவகாரம் - டிரம்பை பைத்தியக்காரன் என சாடிய அமெரிக்க அரசியல்வாதிகள்!
அமெரிக்க அதிபர் Donald Trump ஈரானை நோக்கி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், அந்த கருத்துக்கள் அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
டிரம்ப் தனது Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் உடனடியாக Strait of Hormuz நீரிணையைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தினார். இல்லையெனில், ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தார். மேலும், செவ்வாய்க்கிழமைக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
டிரம்பின் இந்த ஆவேசமான மற்றும் கடுமையான பேச்சு, அமெரிக்க அரசியல்வாதிகளிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
அமெரிக்க செனட் தலைவர்களில் ஒருவரான Chuck Schumer, இந்த பேச்சை “ஒரு கட்டுப்பாடற்ற பைத்தியக்காரனின் நடத்தை” என விமர்சித்தார். அதேபோல், சுயேட்சை செனட் உறுப்பினரும் இடதுசாரி சிந்தனையாளருமான Bernie Sanders, “இது மிகவும் ஆபத்தான மற்றும் மனநிலை சமநிலை இழந்தவரின் பேச்சு” எனக் கூறினார்.
மேலும், Chris Murphy (வெளிநாட்டு உறவுகள் தொடர்பான விவகாரங்களில் செயலில் ஈடுபடும் செனட் உறுப்பினர்), டிரம்பின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க அரசியலமைப்பின் 25வது திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என எச்சரித்தார். Tim Kaine (அமெரிக்க ஆயுதப்படைகள் குழுவில் உறுப்பினர்), இந்த மொழி “வெட்கக்கேடானதும் குழந்தைத்தனமானதும்” எனக் குறிப்பிட்டார்.
முன்னாள் டிரம்ப் ஆதரவாளரும் குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினருமான Marjorie Taylor Greene கூட, டிரம்பின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து, இந்த போர் நிரபராத மக்களை பாதிக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் தொடரும் இந்த மோதல் ஏற்கனவே உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் எண்ணெய் விலைகள் உயர்ந்து, சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண அரசியல் விவகாரம் அல்ல — உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய நெருக்கடியாக மாறியுள்ளது.
“இந்த நிலையில், டிரம்பின் கடுமையான மிரட்டல்கள் உலகளவில் பதற்றத்தை அதிகரித்து, அமெரிக்கா–ஈரான் மோதல் மேலும் தீவிரமடையும் அபாயத்தை உருவாக்கியுள்ளது என The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.”
Ashraff Ameer























