மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம் - ஈராக் பொருளாதாரம் சவாலில்
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் ஈராக் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர் கென்னத் காட்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கின் தெற்குப் பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு ஹோர்முஸ் நீரிணையைத் தவிர வேறு சில மாற்று வழிகளே உள்ளன.
ஈராக்கின் வடக்கே துருக்கி வழியிலான குழாய் ஊடாக சிறிதளவு எண்ணெய் கொண்டு செல்லப்பட்டாலும், பஸ்ரா பகுதியில் உற்பத்தியாகும் பெரும்பாலான எண்ணெய் ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே சந்தைக்குச் செல்ல வேண்டியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் விதிக்கப்பட்ட தடையிலிருந்து ஈராக்கிற்கு மாத்திரம் ஈரான் விலக்கு அளித்துள்ளது. இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு முக்கியமான ஒரு சந்தர்ப்பமாகும்.
ஈராக் தனது பக்கம் இருக்க வேண்டும் அல்லது குறைந்தது அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுடன் இணைந்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே ஈரான் இந்த அனுமதியை வழங்கியிருக்கலாம் என காட்ஸ்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.























