• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களின் வெற்றி மிகவும் இயல்பானது... இமயத்திற்கு நிகரானது...

சினிமா

1965ல் எங்கவீட்டுபிள்ளை திரைப்பட வெள்ளிவிழாவில் அறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் குறித்து பேசிய பாராட்டுரை...

"புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களின் வெற்றி மிகவும் இயல்பானது... இமயத்திற்கு நிகரானது...
அவரை போல் வெற்றியை எட்டிப்பிடிக்க முனைந்த பலர் சறுக்கி விழுந்தனர்...
அவரது வெற்றியை எதனோடும் ஒப்பிட முடியாது...
அதற்கு முனைவதும் வீணான செயல்...

ஆடும் மயிலின் அழகிற்கு தோகை காரணமா? அதன் நீல நிறம் காரணமா? பொன்னிற ஒளி காரணமா? என்று ஆராய்வது எவ்வளவு அபத்தம்?

அத்தனை இயல்பான வெற்றியை அழகுற அடைந்தவர் நண்பர் எம்ஜிஆர் ஆவார்...

அதனால் தான் நடிகர் இயக்குநர் கதாசிரியர் தயாரிப்பாளர் என்று எந்த துறையானாலும் முத்திரை பதிக்கிறார்...

ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் கூட பிரகாசமாக ஒளி வீசுவார்... அவருக்கு மாபெரும் வெற்றி காத்திருக்கிறது


 

Leave a Reply