• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்

இலங்கை

கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

ரம்பொட வெதமுல்ல தோட்டப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்து வருவதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர்கள் அங்கு சென்ற போதே திடீரென குளவி தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்கப்பட்ட அதிகாரிகளின் 2 பேர் கொத்மலை வைத்திய சாலையிலும் மேலும்

ஆபத்தான நிலையிலுள்ள 5 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் 03 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 

Leave a Reply