• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவிப்பேரரசு கவிச் சொந்தங்களுக்கு......

சினிமா

கவிப்பேரரசு கவிச் சொந்தங்களுக்கு,
உங்களோடு இந்த குழுவில் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.

புதிய முகநூல் பக்கத்தை "கவிப்பேரரசு முகநூல் கவிசுவாசக் கழகத்தை" அறிமுகம் செய்வதில் அளவற்ற ஆனந்தம்.

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது என்பதை அடிக்கடி நினைவூட்டும் அடையாளங்கள் கலைகளும், இலக்கியமும்தான்!

இந்தக்குழு இலக்கிய பசி உள்ளவா்களுக்கே உள்ள பந்தியாக இல்லாமல் திரைஇசைப் பாடல்களை ரசிப்பவா்களுக்கும் விருந்து பரிமாறுகிறது!

நமது கவிப்பேரரசு சினிமா பாடலையே இலக்கிய தரத்துக்கு உயா்த்தியவா்.

அவா் கவித்திறனை பாா்த்து வியக்கவும்,ரசிக்கவும், வியந்ததை ரசிகக் கண்மணிகளோடு பகிரவே இந்த புதிய முயற்சி.

சூரியனை
நேசிப்பது தாமரையின் தா்மம்!

சூரியன்(கவிப்பேரரசு) நம்மை நேசிக்கிறதா என்ற கவலை நமக்குத் தேவையில்லை!

நாம் தொடா்ந்து கவிப்பேரரசு வைரமுத்துவை நேசிப்போம் அவரது நூல்களை வாசிப்போம்.
அவா் பெற்ற ஞானபீடவிருதை கொண்டாடுவோம்.

கவிப்பேரரசின் கவிதை, கட்டுரைகளை புதிய கோணத்தில், புதிய ரசனையோடு பதிவிட காத்திருக்கிறேன் .

நண்பா்களே!
எனது ஊற்றுப்பேனா வற்றிவிடாமல் என்றும் எழுதிக்கொண்டே இருக்கும்.

வெற்றி இலக்கை அடையும்வரை
சூரியன் தூங்கலாம்
எனது விழி தூங்காது.

நமது முகநூல் பக்கத்தின் வெற்றிக்கு வெற்றிமாலை சூட்டுவதற்கு ஜெயதேவதை புதிய பூச்செடிகளுக்கு நீா் ஊற்றிக் கொண்டிருக்கிறாள்.
 

Leave a Reply