• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன்

சினிமா

எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த முதல் வெற்றிப்படம் ‘தெய்வத்தாய்.’ அதிலிருந்து ‘இதயக்கனி’ வரை சத்யா மூவீஸின் 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

எம்.ஜி.ஆரிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வீரப்பன், அவருக்கே சம்பளம் கொடுப்பவராக மாறினார். சமயங்களில் வீரப்பனை எம்.ஜி.ஆர். ‘‘என்ன முதலாளி?’’ என்று ஜாலியாக அழைப்பது வழக்கம்.

முதல்வராகி தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட பிறகும், கடைசி வரை தனது ‘கணக்குப் பிள்ளை’யான ஆர்.எம். வீரப்பனுக்கு மாத சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பதை எம்.ஜி.ஆர். நிறுத்தவேயில்லை.

- தி இந்து .
 

Leave a Reply