• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து

இலங்கை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஃபைசல் ஓட்டிச் சென்ற வாகனம், சிலாபம் பகுதியில் உள்ள பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சுவருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தால் வாகனத்திற்கும் சுவருக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (29) இரவு சுமார் 11:45 மணியளவில் நிகழ்ந்ததாகவும், அப்போது அந்த வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
 

Leave a Reply