• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சவூதி இளவரசர் குறித்து டிரம்ப் பேச்சால் சர்ச்சை

ஈரான் போரில் சவூதி அரேபியா அமெரிக்கா ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரானுடனான போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள சூழலில், சவுதி இளவரசருடனான தனது உறவு குறித்து டிரம்ப் பேசியுள்ளார்.

புளோரிடாவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், ஓராண்டிற்கு முன்பு அமெரிக்கா ஒரு வீழ்ந்த நாடாக இருந்தது; ஆனால் இன்று உலகிலேயே மிகவும் செல்வாக்குமிக்க நாடாக மாறிவிட்டதாக சவுதி இளவரசரே என்னிடம் கூறினார்.

நான் ஒரு தோல்வியடைந்த அதிபராக இருப்பேன் என்று நினைத்த சல்மான், இப்போது என்னை திருப்திப்படுத்த (Kissing my a**) வேண்டிய கட்டாயம் வரும் என்று எதிர்பாத்திருக்க மாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சவுதி இளவரசரை அற்புதமான மனிதர் என்றும் ஒரு போர்வீரன் என்றும் டிரம்ப் புகழ்ந்தார்.
 

Leave a Reply