• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது

இலங்கை

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக்கவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘டித்வா’ புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள பொது அவசரகால நிலைமையின் அடிப்படையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் நாட்டின் வழமை நிலையைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து பேணுவதற்குமாக இந்த அவசரகால நிலையை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரச திணைக்களம், உள்ளூராட்சி நிறுவனம், கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளைகளினால் வழங்கப்படும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெற்றோலிய பொருட்கள், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம், சுகாதார சேவை தொடர்பான அனைத்து சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றிய வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply