• Welcome to TamilsGuide
செய்திகள் 1

FBI இயக்குநர் காஷ் படேலுக்கே இந்த கதியா! - Email-ஐ ஊடுருவிய ஈரான் Hacker-கள்

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஈரான் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர்.

Handala Hack Team என்ற ஹேக்கர் குழு, காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கின் இன்பாக்சில் 2010 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட தனிப்பட்ட மற்றும் அலுவல் ரீதியான மின்னஞ்சல்களின் மாதிரிகளை வெளியிட்டுள்ளது.

ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த மேலும் 2 இந்திய LPG கப்பல்கள்

அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பயோடேட்டா ஆகியவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

காஷ் படேலின் மின்னஞ்சல்கள் திருடப்பட்டிருப்பதை அமெரிக்க நீதித்துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஊடுருவல் குறித்து FBI உடனடி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

போதையில் கார் ஓட்டி விபத்து: கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் கைது

ஈரான் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் மிக உயரிய புலனாய்வு அமைப்பின் தலைவரையே குறிவைத்து இத்தகைய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply