• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒன்டாரியோவில் பட்டமளிப்பு விழாக்கள் குறித்து சர்ச்சை - கல்வி அமைச்சர் விளக்கம்

கனடா

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில், பட்டமளிப்பு விழாக்கள் “மாணவர் மையமாகவும், அரசியல் சார்பில்லாததாகவும், உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்” என்று கல்வி அமைச்சர் போல் கலான்ட்ரா பள்ளிக் குழுக்களுக்கு அனுப்பிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கடிதம் குறித்து கனடிய சிவில் உரிமைகள் ஒன்றியம் கடும் கவலை வெளியிட்டுள்ளது.

“பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களின் சாதனைகளை கொண்டாடும் முக்கிய நிகழ்வு. அது முழுமையாக அதற்கே அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்,” என்று கலாண்ட்ரா தெரிவித்தார்.

. இந்தக் கடிதம், Hamilton Wentworth School Board நிர்வாகம் ஆசிரியர்களுக்கு அனுப்பிய நினைவுப்பத்திரத்துக்கு பதிலாக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

அதில் மாணவர் சாதனைகளுடன், காலனித்துவம் போன்ற விவாதத்துக்குரிய தலைப்புகளையும் பேச வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தில், பட்டமளிப்பு விழாக்கள் அரசியல் கருத்துக்கள் அல்லது பாகுபாடுகளை வெளிப்படுத்தும் மேடையாக இருக்கக் கூடாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இதனை பின்பற்ற பள்ளிக் குழுக்கள் தங்களது நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், தனது உத்தரவுகளை பின்பற்றவில்லை என்றால், மாணவர்களின் நலனை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயங்கமாட்டேன் என்றும் எச்சரித்தார்.

அதே நேரத்தில், மாணவர்கள் உரையாற்றும் போது அவர்களின் கருத்துகளை கட்டுப்படுத்துவதில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். 
 

Leave a Reply