• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் இன்று (மார்ச் 260 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் அதிக மக்கள் வசிக்கும் மிகப்பெரிய தீவான ஹோன்சு உடைய கடற்பகுதியில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.

இரவு 7.48 மணியளவில் பூமிக்கு 60 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் தற்போது வரை விடுக்கப்படவில்லை.

ஹோன்சுவில் நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 
 

Leave a Reply