• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடிய அரசியல்வாதி மீது பாலியல் குற்றச்சாட்டு

கனடா

கனடாவின் வின்னிபெக் நகரத்தில் டிரான்ஸ்கோனா (Transcona) தொகுதி உறுப்பினர் ரஸ் வயாட் (Russ Wyatt) மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு நபரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் போதைப்பொருள் வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வயாட் கைது செய்யப்பட்டார்.

56 வயதான ரஸ் வயாட் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2025 டிசம்பர் மாதம் சமூக ஊடக தளம் வாயிலாக அறிமுகமான ஒரு நபரை, வின்னிபெக்கின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவருக்கு சட்டவிரோத போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஸ் வயாட் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் தீங்கு விளைவிக்கும் நோக்கில் போதைப்பொருள் கொடுத்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.  
 

Leave a Reply