• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லெஜண்ட் சரவணனின் லீடர் ரிலீஸ் - புது அப்டேட் கொடுத்த படக்குழு

சினிமா

லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லீடர்.' தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லீடர் திரைப்படம் உலகளவில் ஏப்ரல் 03-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

லீடர் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றளித்துள்ளது. லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், லீடர் திரைப்படம் திட்டமிட்டப்படி ஏப்ரல் 03-ஆம் தேதி வெளியாகும் என்பதை அறிவிக்கும் வகையில், படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
 

Leave a Reply