• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரியோ ராஜ், சானியா ஐயப்பன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் 

சினிமா

2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்த 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து "ராம் in லீலா" என்ற படத்தில் ரியோ ராஜ் நடித்து வருகிறார். இந்நிலையில், ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'Maddy' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திகேயன் இயக்குகிறார். இப்படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக சானியா ஐயப்பன் நடிக்கிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மலையாள நடிகை சானியா ஐயப்பன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply