• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டை விட்டு வெளியேறுங்கள் - ஈரான் தூதுவருக்கு லெபனானின் உத்தரவு

தமது நாட்டிலுள்ள ஈரான் தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு லெபனான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

விரும்பதகாத நபர் என அறிவித்துள்ள லெபனான் அரசாங்கம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெறிமுறைகள் மற்றும் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளை ஈரான் தூதுவர் மீறியுள்ளதாக லெபனான் வெளியுறவு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

தெஹ்ரானின் இத்தகைய செயல்பாடுகள் இருதரப்பு உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், லெபனான் எடுத்துள்ள இந்தத் தீர்மானம் ஈரான் மற்றும் லெபனான் இடையிலான உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

Leave a Reply